வருத்தி உன்னைச்சார்ந்து, வரம் பல கேட்ட என்னை
திருத்தி நெறிப்படுத்திய நேமியுடைய மாயனிடை
அருத்தித்து நீராய் கரைந்துள்ளம், ஊடல் பலவாறு கொண்டு
கருத்தில் அவன் கழலே என்றும் உறுதியென பற்ற நின்றேன்
பற்ற நின்றவையாவும் பிடியகன்று சென்ற போது
உற்ற நோய் வலிகொண்டு உள்ளதையிற்றபோது
கொற்றவனே வேங்கடவா, குறைகொண்டுன் வாசலிலே
கற்று பசுவைத்தேடி காவலென்ன வந்து நின்றேன்
காவல் கொண்டென்னை, என்குலமும் உற்றவரும்
ஆவியுள்ளனைத்தும் உன் பெயர்க்கே வழிவழியாய்
ஏவல் பணிபுரிந்து கைத்தொழுதிடும் அன்பர்களாய்
மேவ வரம் தந்து ஆட்கொள் என் குலவிளக்கே...
A wonderful and meaningful prayer
ReplyDelete