Saturday, October 2, 2010

Ramar thalattu - Perumal thirumozhi - kulashekara azhwar..

Ramar thalattu is a melodious lullaby to Sri rama by kulashekara azhwar.These 10+1 songs were sung in praise of Thiru kanna puram Souri raja perumal..There is a beautiful rendition of the song by Priya sisters available in you tube.I have translated the five stanzas included in the rendition.There is also an aradhana of sri rama in the video clip.Don't know which temple.But i've been watching it every day for the past 4 days as it is very captivating.

http://www.youtube.com/watch?v=8iLjj-0R2Q4

இந்த பாசுரத்தின் சொல்லாட்சி வியக்க செய்கிறது.
ராமன் மாயை ஒன்றும் செய்யவில்லை, சுதர்சனம் தரிக்கவில்லை, சூரியனை மறைக்கவில்லை, தேரை அழுத்தவில்லை,ஏன் தேர் கூட இல்லை. கானகத்திலும் மேட்டிலும் நடந்த பாதங்களுக்கு பாதுகைகளும் இல்லை, பரதன் கொண்டு சென்று விட்டான். வானரங்களுடன் சேர்ந்து இரு மானுடர்களாய் ராமனும் இலக்குவனும் போர் புரிய, ராவணனை வீழ்த்தும் சாத்தியக்கூறுகள் எத்தகையானவை?
அரக்கர் குல திலகன், மாயம் அறிந்தவன், பலம் பொருந்தியவன், சிறந்த சிவ பக்தன், இசை கலைஞன்,ஆள் , படை பலம் பொருந்தியவன் இராவணன். ராமனோ முடியிழந்து , மனையிழந்து, கானகமெல்லாம் அரற்றி  திரிந்து வந்தவன். மானுடப்பிறவியாய் இருந்து மாயமொன்றும் புரியாமல் அரக்கர்கோன் ராவணனை வீழ்த்த ராமன் எவ்வளவு முயன்றிருக்க வேண்டும்?
இங்கு நமது ஆழ்வார் " தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய் !" என சுலபமாக சொல்லிவிட்டார் - ஏதொ தானே உதிர்ந்து வீழ்ந்தது போல. ராவணன்  அத்தனை வலுவற்றவனா? அல்லது ராமனின் கணைகள் பலம் பொருந்தியவைகளா?
எது சிந்தும்? நிறைந்து தளும்புவது சிந்தும் ... ராவணனுக்கு ஏன் தலை சிந்தியது? சீதையை கவர்ந்தது ஒரு புறமிருக்க ராவணனுக்கு இன்ன பிற தீய குணங்களும் நிரம்பிவிட்டன. சீதை மீதுண்டான மோகம் மட்டும்தானென்றால்  தனயன் இறந்ததும் மோகம் மறைந்திருக்க வேண்டும். ஒரு மானுடன் போர் புரிய வந்திருக்கிறான் ,அவனை கொல்ல முடியாததொன்றுமில்லை என ஆணவம் தலையில் நிறைந்தது, தளும்பியது, பின் முடிகள் கணைக்கு சிந்தியது.
மற்றொன்று , இங்கு நமது ஆழ்வார் தாலாட்டு பாடுகின்றார்.தாலாட்டும் இந்த குழந்தை வன்மையாக போரிட்டு வென்றது  என சொல்லுவது சிறந்ததாகாது, ஏதொ குழந்தை தெரியாமல் இடறி வீழ்த்தியது போல " சிந்துவித்தாய்" என்றால் குழந்தையை குற்றம் சொல்ல தோன்றாது .
இனி பாசுரத்திற்கு செல்லலாம்

மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன்சேர்
கன்னி நன் மாமதில்புடை சூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே! ராகவனே! தாலேலோ !

Her fame lasting long, as long as the earth.
son, kousalya's ,whose womb beheld you forth.
lullaby to you, on this day's night fall..
Black pearl of the town, whose walls rise tall
Bejeweled in gold, kannapuram of lore.
nectar of my soul, raghava my dear.
you spilled his crown, who ruled deep south
sleep for a while, my life , my worth..

கொங்குமலி கருங்குழலாள் கௌசலைதன் குலமதலாய் !
தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா! தாசரதீ
கங்கையிலும் தீர்தமலி, கணபுரத்தென் கருமணியே !
எங்கள் குலத் தின்னமுதே ! இராகவனே ! தாலேலோ

Dearest thou to janaka and dasaratha,
born to a clan of ma kousalya..
with fragrant tresses,dark as clouds
her fame, you made immortal as gods'
residing at kannapuram, like a pearl dark
whose waters pride holy,let me set to rock
thy cradle,honey, close your eyes dear
Raghava,sleep a while, for the dawn isn't near..

தாமரை மேல் அயனவனை படைத்தவனே தயரதந்தன்
மாமதலாய் ! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே!
ஏமருவும் சிலைவலவா! இராகவனே! தாலேலோ .

காமரங்கள் ??  (ஏமருவும் சிலைவலவா  -  அம்புகள் பொருந்திய வில்லை வளைக்கும்  வல்லமை பெற்றவனே )

First born of Dasaratha, you created the creator
wedded to mythili, your might known far..
To bend and to shoot, sheets of arrows
staying here, a place , where bees in droves
set always to sing your name and your praise
dark diamond thou, i seek thy grace,
Raghava, my dear, lullaby to you
Adorning kannapuram, like a fresh dark dew..

மலையதனா லணைகட்டி மதிளிலங்கை அழித்தவனே
அலைகடலை கடைந்தமரர்க் கமுதருளிச் செய்தவனே !
கலைவலவர் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிலைவலவா! சேவகனே! சீராமா ! தாலேலோ

கலைவலவர் - கலை வல்லவர்.

You bridged the gap with mighty rocks,
and wiped the city beyond the docks.
churned the ocean, to woo your partner
Gods partook their share of nectar.
With us , in kannapuram you stayed
A place where learned men parade.
Skillful archer, sleepest thou,
Lord , sreerama! thalelo..

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்தடிவணங்க அரங்கநகர் த்துயின்றவனே !
காவிரி நல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே!
ஏவரி வெஞ் சிலைவலவா !இராகவனே  தாலேலோ

(ஏவரி வெஞ் சிலைவலவா - அம்புகள் தொடுக்கப்பட்டு பகைவருக்கு பயத்தை விளைவிக்கும்  வில்லை வளைப்பவன்)

Gods, demons and even directions
are nothing but his graceful creation
they all come , landing into his residing
To Srirangam, where my lord is resting
In kannapuram , also he stays
the same cauvery flows here with ease.
Deft with his  mighty fearful bow,
Raghava, lullaby unto you now..

No comments:

Post a Comment