Thursday, October 14, 2010

A wonderful similie..

A cool breeze, dark clouds and a sky waiting to drizzle... As if yercaud has descended upon this scorching land. To go for a long drive in this mild rain, with a song..Ah! heaven..NOT  those heavy downpour when we are stuck in slush and traffic and start cursing the rain..this cloudy evening  reminds me of a beautiful pasuram by Andal..
Being jealous of  Pancha janyam( the conch of Sri krishna.), she sings in awe about the glory of it, sometimes admonishing it , sometimes  jealous and at times wrathful at its closeness to her lover. While telling about its beauty Kothai tactfully introduces a nice similie...

தடவரையின் மீதே சரற்கால சந்திரன்
இடை உவாவில் வந்து எழுந்தாலே போல் நீயும்
வட மதுரையார் மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்றிருந்தாய் கோல பெருஞ்சங்கே .
கோதை நாச்சியார்

Closeted in my lord's hand
Like a full moon on a cloudy day
Arising from the eastern mound
Blissfull and comfortable is your stay..
Kothai natchiar.. natchiyar thirumozhi

கண்ணன் மேனி கருமை கைத்தலம் தாமரை. இங்கே சரற்கால சந்திரன் - மழைக்கால சந்திரன் ..கிழக்கு மலையில் சந்திரோதயம் போல என் மன்னவர் கையில் எழிலுடன் இருக்கின்றாய்..(இங்கே லேசான பொறமையோ என தோணுது)..தாமரை வண்ணம் தெரியாத அளவுக்கு கருமை மட்டுமே ஆட்சி..என்றால் கண்ணன் பாஞ்சசன்னியத்தை இறுக பற்றி இருக்கிறான். உள்ளங்கை தாமரை தெரியவில்லை ... உனக்கு மட்டும் என்ன சலுகை என நினைக்கிறாளோ கோதை பிராட்டி?  காதலும் தமிழும் கற்பனையும் சிறக்கும் பாசுரம் இது..
Kannan is variously described  as dark/ blue/grey complexioned person..but his lips, his eyes, palm and soles are lotus.. maybe blue , pink.. But none of the other colours are told here..only the off white conch which arises like a moon over the dark ? green / blue hills on a rainy evening.A rainy evening rules out the crimson hue of twilight .A fullmoon arises well before it is too dark.. But here there is not a trace of pink..which means kothai is jealous of the way he is holding the panchajanyam..in a tight grip..without his palms exposed.. Today's evening clouds made me think of this similie...
photo courtesy..www.thiruvilliputtur.blogspot.com
All ten pasurams about this conch makes an  interesting  read. The effect of love and passion towards krishna is displayed very naturally in these 10 stanzas..Infact it was the first stanza of these 10 songs which i accidentally listened, made me ponder about the beauty of their composition..Very effective and crisp in Tamil...i translate it into english.. though definitely faded when compared with the original.. I write here to share my enjoyment about this pasuram..Because the day i heard this I told the pasuram and it s meaning to a big gathering..who were amused as to why I was talking irrelevantly...

கற்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவழ செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ?
மருப்பொசித்த மாதவன்தான் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்று கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே ....
கோதை நாச்சியார்

what does it smell? of lotus or camphor?
how does it taste? of honey or nectar?
parted ruby lips, a place you shelter..
their fragrance and taste, ye do know better
I wait to listen with awe and eager
your words on him ,on my lord, his nature...
Kothai natchiayar

A perfect love lorn poem...by a girl who is madly in love with krishna..
by the time i'm finishing this ...it has started to rain ...

4 comments:

  1. Nice post!
    Getting drenched in rain, as I speed along on the bike, on East Coast Road is a "wonderful" experience...But, there is a much more "blissful" experience than this!

    Even before the rain, driving on the coastal road, opposite to all those dark clouds gathering against you, like a lover preparing for a fight with you...

    The smell of the rainy air looming on your nose...
    The chill of the rain combining with the chill of the sweat...
    and lo, there the lightning flashes...my love removed the cloud blanket and exposes the dazzling beauty...
    I am racing towards my love, through the clouds, wanna fight with you dear...and the rain drops start drizzling on me! Bliss! Such a poem is this!

    தடவரையின் மீதே சரற்கால சந்திரன்
    இடை உவாவில் வந்து எழுந்தாலே போல் நீயும்
    வட மதுரையார் மன்னன் வாசுதேவன் கையில்
    குடியேறி வீற்றிருந்தாய் கோல பெருஞ்சங்கே

    கற்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
    திருப்பவழ செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ?
    மருப்பொசித்த மாதவன்தான் வாய்ச்சுவையும் நாற்றமும்
    விருப்புற்று கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே ..

    ReplyDelete
  2. முதல் பாட்டின் ஜீவ வரி: குடியேறி + வீற்றிருந்தாய் + கோல பெருஞ்சங்கே
    ஒவ்வொரு சொல்லையும் பாருங்க! Choicest weaving of words into a Painting!

    குடியேறி = Permanent Immigration! :)
    சங்கே, நீ எங்கோ கடலில் பிறந்தாய், ஆனால் இப்போ அவன் கைக்கு வந்து விட்டாய்!
    எவ்வளவு நாள் இருப்பாய்? விசா முடியும் வரையிலா? மூனு வருசமா? ஆறு வருசமா? :)
    இல்லை...நீ "குடியேறி"...நீ அவன் கையில் குடிமகள் ஆகி விட்டாயே! நிரந்தர வாசம் செய்யும் வாசவி ஆகி விட்டாயே!

    வீற்றிருந்து = குடியேறினால் மட்டும் போதுமா? மதிப்பான வாழ்வு வேணாமா? வெறுமனே "இருந்து"-வா? இல்லை! "வீற்றிருந்து"! அவன் கையிலே கொலுவிருக்கிறாயோ? "குடியேறி வீற்றிருந்து"

    கோலப் பெருஞ் சங்கே = அழகாவும் இருக்க, அதே சமயம் நல்லாப் பெருசாவும் இருக்க! சங்கே! அவன் பொக்கிஷமே!
    ----------------------------

    சரற்காலச் சந்திரன் = மழைக்கால மதி
    இந்த நிலவு ஒரு மாதிரியாகப் போதை தரும்! முழுக்கத் தெரியும், ஆனா முழுக்கத் தெரியாது! மெல்லிய வெண்பட்டு கொண்டு மூடினாற் போலே இருக்கும்! Bit Hazy! அது போல் போதையாகத் தெரிகிறது இவளுக்கு!

    உவா = பெளர்ணமி/அமாவாசைக்கு பெயர்!
    இடை உவா = பெளர்ணமி என்று கொள்ளலாம்! அப்படித் தான் வைணவ ஆசார்யர்கள் கொள்வார்கள்! நாம் இயற்கையோடு ஒட்டிப் பார்க்கலாமா?

    சங்கு முழுதும் வட்டம் கிடையாதே! அழகிய வளைவு எல்லாம் அதில் இருக்குமே! பெளர்ணமிக்கு வளைவு ஏது? So Itz all about curves! :) கோதை வரையும் ஓவியம் அப்படி!

    உவ-உவா = உவர்ப்புள்ள கடல்!
    தடவரை ஆகிய பெரிய மலையில் ஆரம்பத்தில் தோன்றும் சந்திரன்...
    சிறிது நேரம் கழித்து, உவர்ப்புள்ள கடலின் மீது வந்து தோன்றுகின்றான்!

    அதே போல்...
    அவன் மலை போன்ற தடந் தோளில்/பின்கையில் இருந்த சங்கே...
    இப்போது, அவன் வாய்க் கடலில் வந்து தோன்றிவிட்டாயோ?
    தட வரையின் மீதே சரற்கால சந்திரன்
    இடை உவாவில் வந்து எழுந்தாலே போல் நீயும்?

    கடலில் தோன்றிய மதி கண்டு அலையெல்லாம் ஆர்ப்பரிப்பது போலே,
    அவன் வாயில் தோன்றிய உன்னைக் கண்டு நாங்கள் எல்லாம் ஆர்ப்பரிக்கின்றோம்!

    தடவரை = அவன் மலைத் தோளில்
    சரற்கால சந்திரன் = போதை தரும் மழைமதி
    இடைஉவா = இடையில் உள்ள அவன் உவர்ப்பான கடல் வாய்க்கு வந்தாயோ?

    வட மதுரையார் மன்னன் வாசுதேவன் கையில்
    குடியேறி வீற்றிருந்தாய் கோல பெருஞ்சங்கே

    அப்போது தோளிலும் உன்னைப் பின்னங்கையில் பிடிச்சிக்கிட்டு இருந்தான்!
    இப்போது வாயிலும் உன்னை முன்னங்கையில் பிடிச்சிக்கிட்டு இருக்கான்!
    இப்படி உன்னைச் சதா கைப்பிடித்துக் கொண்டே இருக்கானே! = கையில் + "குடியேறி" + வீற்றிருந்தாய்

    கோல பெருஞ்சங்கே! கோல பெருஞ்சங்கே! நானும் உன்னைப் போல் ஆக மாட்டேனா? அவனுக்கு என்னை விதிக்கிற்றியே! அவனுக்கு என்னை விதிக்கிற்றியே!

    ReplyDelete
  3. Next comes the dashing words from the mind of a girl...so publicly! Actually in the pasuram, this song is the 1st before the previous one.

    ஏ சங்கே...அவனுக்கு நான்-ன்னு விதிச்சாச்சி! உள்ளம் இணைஞ்சாச்சி! உடல் தான் இன்னும் இணையவில்லை!
    அந்தப் பயத்தில், ஐயத்தில், ஆர்வத்தில், ஆராய்ச்சியில் கேக்குறேன்! சொல்லு சங்கே!

    இதை நான் யாரிடம் போய்க் கேட்பேன்? ஏற்கனவே ஏச்சும் பேச்சும்! உலக வழக்கத்துக்கு மாறாக, கற்பனையா, ஒருதலையாக் காதலிக்கிறேன்-ன்னு! இதுல இதெல்லாம் போய்க் கேட்டா, நல்லா பொண்ணை வளர்த்திருக்காரு பெரியாழ்வார்-ன்னு கேலி பேசுவாங்களே!
    ஆன்மீகம் பாடச் சொன்னா, வாய்ச்சுவையும் தித்திப்பும்-ன்னு பாடற ஒரு டைப்போ?-ன்னு ஏசுவாங்களே! அதான் சங்கே உன்னிடம் கேட்கிறேன்! நீ ஜடப் பொருள் ஆச்சே! உனக்கு மனிதர்களைப் போல "நல்ல" மனசு கிடையாது அல்லவா? எனக்குச் சொல்லேன், சொல்லேன்.....

    அவன் கிட்ட முதலில் நெருங்கும் போது என்னைப் பேர் சொல்லிக் கூப்பிடுவான்...
    அப்போ, அவன் பேச்சு என் காதில் விழும் முன்பே, அவன் வாசனை என் மூக்கில் விழும்!

    அந்த வாசனை எப்படி இருக்கும்? பச்சைக் கருப்பூரம் போல இருக்குமா? தாமரைப் பூ வாசம் போல இருக்குமா? = கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?

    அவனை நான் ஏற்கனவே "கண்டு" இருக்கிறேன் = கண்!
    அவன் பெருமைகளை ஏற்கனவே "கேட்டு" இருக்கிறேன் = காது!
    ஆக, இந்த ரெண்டு புலன்களும் அதன் இன்பங்களை ஏற்கனவே அடைந்து விட்டன!

    ஆனால் மீதம் இருக்கும்...
    என் மூக்கு?
    என் வாய்?
    என் உடல்?

    * கண்/காது = தொலைவில் இருந்தே கூட இன்பம் கொடுத்து விடும் புலன்கள்! தொலைவில் இருந்தே காணலாம்/கேட்கலாம்!
    * மூக்கு/வாய்/உடல் = அருகில் வந்தால் மட்டுமே இன்பம் கொடுக்கும் புலன்கள்! கிட்டக்க வந்தால் தான் முகர/சுவைக்க முடியும்! தழுவ முடியும்!

    அதனால் கண்ணையும் காதையும் இப்போ விட்டு விடுவோம்! அதுங்க ஏற்கனவே பசியாறி விட்டுவிட்டன! பசியோடு இருப்பது என் மூக்கு+வாய்+உடல் மட்டுமே!

    அவன் சம்பந்தமான ஒன்றைக் கூட இன்னும் முகரவில்லை! = கருப்பூரம், கமலப் பூ போல் இருக்குமா?
    அவன் சம்பந்தமான ஒன்றைக் கூட இன்னும் சுவைக்கவில்லை = அவன் பவழச் செவ்வாய் தித்தித்து இருக்குமோ?

    கருப்பூரம்-ன்னு சொன்னேனே தவிர, அம்புட்டு வாசனை இயற்கையா இருக்காதே! சரி, தாமரைப் பூவிற்கு மல்லி போல் வாசனை அதிகம் இல்லை! ஆனாலும் தாமரைக்குன்னு ஒரு வாசம் இருக்கும்! அது போல் அவன் வாய்வாசம் இருக்குமா?

    அவன் பவழச் செவ்வாய் தித்திக்குமா? பவழம் போல சிவப்பா இருக்கும்-ன்னு சொன்னேன்! அதே பவழம் போலவே உவர்ப்புச் சுவையா இருந்திடுச்சின்னா? பரவாயில்லை இனிப்போ, துவர்ப்பா-ன்னு முக்கியம் இல்லை! அவன் சுவை - அதான் முக்கியம்!

    மருப்பொசித்த மாதவன் = ஒரு பெரும் யானையை அடக்கி வீழ்த்திய அவன்!
    அப்போது அவனுக்கு எப்படி வேர்த்து ஊத்தியிருக்கும்? நா வறட்டி, எப்படி உமிழ்நீர் சுரந்திருக்கும்?

    இப்படி ஒரே நேரத்தில் அவன் வியர்வை வாசமும், உமிழ்நீர்ச் சுவையும் கிடைக்கும் போது...
    எதுக்கு கருப்பூரம்/கமலப்பூ என்று வாசனைக்கும், பவழச் செவ்வாய்-ன்னு தித்திப்புக்கும் தனித்தனியாக் கேட்கணும்? இதோ, ஒரு சேரக் கேட்கின்றேன்!
    மருப்பொசித்த = யானைக் கொம்பை ஒடித்த போது வந்த அவன் வியர்வை வாசம் + உமிழ்நீர்ச் சுவை = இரண்டையும் எனக்குச் சொல்லாழி வெண்சங்கே!

    என்னவன் வாசம், இனி நான் அதில் வாசம்
    என்னவன் இனிப்பு, இனி நான் அதில் களிப்பு
    என்னவன் மேனி, இனி நான் அதில் தோணி!

    கண்டு/கேட்டு ஆகி விட்டது!
    இனி உண்டு, உயிர்த்து, உற்று...

    கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
    ஒண்டொடி கண்ணே உள! (குறள்)

    ReplyDelete